பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின் வட கிழக்கிற்கான நடுவப்பணியகத்திற்குரிய அடிக்கல் நாட்டுவிழா 26.11.2024 இன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார்.
பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரான தேவராசா தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வில் நடுவப்பணியகத்திற்கான முதற்கல்லினை மாவீரர் லெப் கேணல் பிரசன்னாவின் தந்தையாரான பசுபதிப்பிள்ளை கந்தையா நாட்டினார். அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அடிக்கல் நாட்டியதையடுத்து ஏனைய அடிக்கற்கள் நாட்டப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திருமதி.பாலினி ரவிச்சந்திரன், கிளிநொச்சி வர்த்தகசங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.