தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள்,மத தலைவர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

அந்தவகையில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை மாவீரர்களான சித்தார்த்தன் .ஈழவன் .அசோக் அவர்களுடைய தந்தையார் முருகுப்பிள்ளை குணபாலன் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்த நிலையில் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர்.

Latest news

Related news