முல்லைத்தீவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 2 மில்லியன் அமெரிக்க டொலரில் திட்டங்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தினால் Adaptation Fund நிதி உதவியுடன் நிறைவேற்று நிறுவனங்களாகிய சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாறுபாட்டை தாங்கும் தன்மை மீளாய்வுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.

வலுப்படுத்துவதற்கான செயல்திட்ட மேற்படி திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாறுபாடுகளினால் பாதிக்கப்படக்கூடிய விவசாய, மீன்பிடி சமூகங்களின் பொருளாதார விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு மற்றும் திட்ட ஆதரவு குழுக்கூட்டம் கடந்த 4 ஆம் திகதி மேலதிக மாவட்ட செயலாளர் S.குணபாலன் தலைமையில் UN-HABITAT இலங்கைக்கான நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திருமதி. ஹர்சினி கலாங்கொட மற்றும் திட்ட முகாமையாளர், பொறியியலாளர் M.S.M அலீம் மற்றும் 35 தொழில்நுட்ப திணைக்கள அதிகாரிகளின் பங்களிப்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் ஆரம்ப உரையினுடாக திட்டத்தின் வெற்றிக்கு பங்குதாரர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டில் இத்திட்டமானது, உப்புநீர் உட்புகுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள், 15 சிறு நீர்ப்பாசன குளங்களை புனரமைத்தல், அவசர நிலைமைகளின் போது மக்கள் வெளியேறும் பாதைகளை புனரமைத்தல், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் அழிவுகளை தாங்கக்கூடிய கழிவறைகளை கட்டுதல், கால நிலையை தாங்கும் விவசாயத்தை ஊக்குவித்தல், பாதிக்கப்படக்கூடிய மீன்பிடி குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இத்திட்டமானது மாவட்ட அளவிலான திட்ட ஆதரவு குழுவின் ஒப்புதல் மற்றும் உதவியுடன் சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த முயற்சிகளின் மூலம் வறட்சி, வெள்ளம், உப்புநீர் உட்புகுதல் போன்ற காலநிலை அபாயங்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்படி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எதிர்காலத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oplus_0
Oplus_0
Oplus_0
Oplus_0
Oplus_0

Latest news

Related news