புதுக்குடியிருப்பு நகரம் சுத்தம் செய்யும் நடவடிக்கை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் பொலிசார், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், இராணுவத்தினர் ஆகியோர் இன்று ஈடுபட்டுள்ளார்கள்.

வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேசமானது பிரதேச சபையினால் கழிவகற்றல் செயற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்படாதிருப்பதாக மக்கள் வணிகநிலைய உரிமையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள்

இதனால் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும் நிலை கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முல்லைத்தீவு மாவட்டத்தில் வரி வருமானம் ஊடாக அதிகளவான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் பிரதேச சபையாக இயங்கி வருகிறது.

பிரதேச சபையின் செயற்பாடுகளை இன்று 40க்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு கழிவகற்றல் செயற்பாடுகளில் முன்னெடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் பிரதேச சபையிடம் கடந்த காலத்தில் வினாவிய போது பிரதேச சபையின் ஆளணி பற்றாக்குறை இயந்திரம் குறை போன்றவற்றால் பிரதேச சபையால் முழுமையாக தமது வேலைகளை முன்னெடுக்காமல் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள்.

Latest news

Related news