புதுக்குடியிருப்பில் பலரையும் கவரக்கூடிய வகையில் திறந்து வைக்கப்பட்ட குயின் பூங்கா (photos)

அரச நிறுவனமும், பொதுமக்களும் இணைந்து செயற்படும் செயற்திட்டத்தின் முன்மாதிரியான செயற்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில் குயின் பூங்கா இன்றையதினம் (03.02.2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பூங்காவானது நீண்டகாலமாக பாவனையற்று இருந்த நிலையில் அதனை சீர் செய்து மீண்டும் புதுப்பொலிவுடன் குயின் பூங்காவாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையோடு இணைந்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பூங்காவில் துப்பாக்கியால் இலக்கு வைத்து சுடுதல், படகோட்டம், கூடைப்பந்தாட்டம், அம்பெய்தல் போன்ற பல்வேறு பெரியவர்களுக்கான விளையாட்டுக்கள் , சிறியவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் இனிமையான நாளை கொண்டாடுவதற்கு ஏற்ற நிலையிலும் இடங்கள் வடிவமைக்கப்பட்டு இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் சி.குணபாலன், பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த், புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை செயலாளர் ச.கிருசாந்தன், குயின் பூங்கா உரிமையாளர் ப.சுபாஸ்கரன், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் நவநீதன், அவலோன் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் முகாமையாளர், மதகுருமார்கள், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உத்தியோகத்தர்கள், ஜனசக்தி முன்பள்ளி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய தொழிநுட்ப காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாெலைபேசிக்குள்ளேயே தொலைந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் கிடைக்கும் ஓய்வு பொழுதை மகிழ்ச்சியாக கழிக்ககூடிய பொது விளையாட்டு இடங்கள் இல்லாமையே ஆகும்.இதனை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த குயின் பூங்காவானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news