இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளியவளையில் கிரிக்கெட் போட்டி

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளியவளையில் ரைற்றன் ஸ்போட்சினரால் மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று இன்றையதினம் (04.02.2025) காலை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது.

அணிக்கு 11 பேர் கொண்ட 6 பந்து பரிமாற்றங்களை கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியானது முள்ளியவளை வித்யா விளையாட்டு கழக மைதானத்தில் இன்றையதினம் இடம்பெற்ற போட்டியில் 10 அணிகள் போட்டியில் போட்டியிட்டிருந்தன .

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ. அமரசிங்க, முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரதுங்க , மற்றும் பொலிஸார், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news