குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானை! 40தென்னைமரங்கள் அழிப்பு.

கைவேலி கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் பயன்தரு 40 தென்னை மரங்கள் அடித்து அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் நேற்று (04.02.2025) இரவு காட்டு யானை ஒன்று புகுந்து 40 பயன்தரும் தென்னை மரங்களை அடித்து அழித்துள்ளது.

அண்மைய காலங்களாக காட்டுயானைகள் அத்துமீறி குடியிருப்பு பகுதிகளிலும், வயல்நிலங்களிலும் நுழைந்து பயிர்களை அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news