மலேரியா பரவும் அபாயம். விழிப்புணர்வை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடை இயக்கத்தினர்

இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளமையை தெளிவுபடுத்துவதற்கான மாபெரும்  சிரமதான விழிப்புணர்வு நிகழ்வு  இன்றையதினம் (24.04.2025)  புதுக்குடியிருப்பில் இடம்பெற்றிருந்தது.
ஏப்ரல் 25 மலேரியாதினம்  கொண்டாடப்படுவதனால்  மலேரியா தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு சிரமதானம் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி  வைத்தியர் தயானந்தறூபன் தலைமையில் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் மலேரியா தடுப்பு இயக்கத்தின் ஊழியர்களால்  சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த சிரமதான பணி மூலம் புதுக்குடியிருப்பு  நகரை சுத்தப்படுத்தியதோடு மக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வர்த்தகர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள் என பலருக்கும் விழிப்புணர்வு துண்டுபிரசுரமும்  வழங்கப்பட்டிருந்தது.

Latest news

Related news