முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், காலை10 மணிவரை 20,975 (24.97%) சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிக்கின்றனர்.
87ஆயிரத்து 800 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொலிசாரின் பாதுகாப்புக்கு அமைதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.