இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினரின் ஏற்பாட்டில் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேசியத்திற்கு முன்னோக்கி செல்வதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலைகள், மாவட்ட பயிற்றுவிப்பாளர், கழகங்களுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (20.08.2025) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் வீரர்களை தேசியத்திற்கு முன்னோக்கி செல்வதற்கு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதனை தாெடர்ந்து
கிரிக்கெட் உபகரணங்கள் , மற்றும் பாதணிகள், மாவட்ட பயிற்சியாளர்,
பாடசாலை வீரர்கள், கழகங்களிற்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வைத்தியர் கற்கண்டு உதயசீலன் தலைமையில்
இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் பாலன் முகுந்தன் மற்றும் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை பொறுப்பதிகாரிகள், பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள்,ஆசிரியர் கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












