முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளிகள் நலன் கருதி நோயாளிகள் தங்குமிடத்திற்கான ஒருதொகை மெத்தைகள் இன்றையதினம் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

Clean srilanka திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பெரண்டினா நிறுவனத்தின் அனுசரணையில் கேப்பாபிலவு கிங்ஸ்ரார் இளைஞர் கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒருதொகையான மெத்தைகள் மூன்றாம் கட்டமாக இன்றையதினம் (27.08.2025) வைத்தியசாலை உதவி பணிப்பாளரிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சம்மேளன உதவி பணிப்பாளர் சுந்தரலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட தேசிய சம்மேளனத்தின் பிரதிநிதி நே.சங்கீதன், பெரண்டினா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் இளைஞர் கழகங்கள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







