சிறப்பாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றையதினம் (27) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு இடம்பெற்றிருந்தது..

 

மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் வடமாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட அபிவிருத்தி குழுச் செயலாளருமாகிய திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் ஆடம்பெற்றிருந்தது.

 

குறித்த கூட்டத்தில் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் விசேட ஒதுக்கீடுகளிலும் மேற்க்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், டித்வா புயலின் பாதிப்பு அதன் பின்னரான நிவாரணம், மீள் கட்டுமானங்கள் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 

விசேடமாக கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் விசேட நிதி ஒதுக்கீடு, பொருளாதார, சமூக அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் முதன்மையாக கலந்துரையாடப்பட்டது.

 

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் கல்வி, சுகாதாரம் ,காணி,போதைப்பொருள் ஒழிப்பு, மகாவலி அதிகாரசபை, வனவளத் திணைக்களம் தொடர்பான காணி விடயங்கள், விவசாயம் , என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முக்கிய சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

 

இந் நிகழ்வில் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ.து.ரவிகரன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா, வடமாகாண திணைக்களங்களின் செயலாளர்கள்,மேலதிக அரசாங்க அதிபர்கள், மற்றும் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள்,முல்லைத்தீவு உதவிபொலிஸ் அத்தியட்சகர், முப்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 

Latest news

Related news