புதுக்குடியிருப்பில் போக்குவரத்தின் போது வெற்றிலைமென்ற நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

வீதிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களுக்கு எதிராக இன்றையதினம் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆகியோருடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன் தலைமையில் பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் திடீர் சோதனை நடவடிக்கையினை ஒன்றினை இன்றையதினம் (12.02.2026) மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நடவடிக்கையின் போது புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பயணித்த பேருந்து , கார் , முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களை வழி மறித்து பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். இதன்போது வெற்றிலை மென்ற மூன்று நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியான முறையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை, பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்களால் இணைந்து மேற்கொள்ளப்படும் என இதன் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Latest news

Related news