விசுவமடுவில் மகளீர்கள் கௌரவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட மகளீர்தினம்

புதிய கிராம மக்கள் அறக்கட்டளை அமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச மகளீர் தின விளையாட்டு போட்டி விசுவமடு கிழக்கு அட்டைக்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் நேற்றையதினம் (08) சிறப்புற இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு கிராம மக்கள் அறக்கட்டளை அமைப்பின் இணைப்பாளர் தீபன் அனுஸ்ரியா தலைமையில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் இந்நிகழ்வில் புதிய கிராம மக்கள் அறக்கட்டளை அமைப்பின் மகளீர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றிருந்தது. அதில் வெற்றியீட்டிய மகளீருக்கான பரிசில்கள், சிறந்த முறையில் சேமிப்பு நடவடிக்கையில் தெரிவு செய்யப்பட்ட மகளீர்கான பரிசில்கள், வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன், விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலை அதிபர் யோகராசா, புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் கு. அகிலன், விசுவமடு வர்த்தக சங்க தலைவர் ஞானம், சமூக செயற்பாட்டாளர்களான சக்தி, கண்ணா, விசுவமடு மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி, தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மகளீர் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Latest news

Related news