ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் உலக அழகியாக கொண்டாடப்படும் பிரபலம். பாலிவுட்டின் டான் நாயகி, தமிழில் அவ்வப்போது படங்கள் நடித்து மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
மணிரத்னம் இயக்கத்திவ் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களால் அதிகம் பாராட்டப்பட்டார்.
50 வயதை தொடபோகும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த வயதிலும் அழகில் ஜொலிக்கிறார்.
நடிகை பியூட்டி டிப்ஸ்
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை தனது நீண்ட வருட பழக்கமாக வைத்துள்ளாராம்.
கடலைமாவு, பால், தேன் சேர்த்து முகத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து வாஷ் செய்வாராம், இதனை மாதம் ஒருமுறை போடுவாராம்.
தயிருடன் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து முகத்தை ஸ்க்ரப் செய்வாராம். சந்தன எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்வாராம்.
சம்மரில் தினமும் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி கொள்வாராம்