ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் வெளியான தகவல்

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சு மற்றும் திறைசேரியில் நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வந்தன.

இந் நிலையில் அதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

Latest news

Related news