மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்
மேலும், மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வருகிற ஜூலை 14ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக விஜய் டிவி குக் வித் கோமாளி நட்சத்திரம் மோனிஷா நடித்துள்ளார்.
குக் வித் கோமாளி 4ல் கோமாளியாக என்ட்ரி கொடுத்த மோனிஷா தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
புகழ், குரேஷி, சுனிதாவிற்கு அடுத்து மோனிஷாவின் பெயர் தான் குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.அந்த அளவிற்கு பிரபலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.