ரஜினிக்கு ஜோடியாகும் 52 வயது நடிகை.. நீண்ட காலம் காத்திருந்தவருக்கு அடித்த ஜாக்பாட்

ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். அது மட்டுமின்றி அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் அவர் நடித்து இருக்கிறார்.

அந்த படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற ரோலில் நடக்கிறார். படத்தில் குறைந்த நேரம் தான் அவரது காட்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் படத்தில் அவருக்கு ஜோடி இருக்கிறதாம்.

ஹீரோயின் யார்?

லால் சலாம் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் நடிகை ராதிகாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

52 வயதாகும் நிரோஷா இதற்குமுன் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். ஆனால் ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் அவருக்கு நிறைவேறாமல் இருந்தது.

தற்போது 52 வயதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு நிரோஷாவுக்கு கிடைத்து இருக்கிறது. 

Latest news

Related news