மின் கட்டணம் குறைப்பு! இறுதி தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் யோசனை ஒன்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06.2023) எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த யோசனைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்ளும் கேட்டறியப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண குறைப்பு

மின்கட்டண திருத்த பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை குறைக்க மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது.

இதற்கமைய வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் 30 அலகுகள் வரையிலான மின் கட்டணத்தை 23 வீதமாகவும் உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை 29 முதல் 40 வீதமாகவும் குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Latest news

Related news