வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (05) அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை ஏ9 வீதிஅரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் கனரக வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ்ரக வாகனத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதுடன் 600மீற்றர் தூரம் வரையில் மோட்டார் சைக்கில் தரையில் இழுத்துச்சென்றுள்ளாதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இச் விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான வவுனியா குருமன்காடு பகுதியினை சேர்ந்த 24வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மூன்று வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest news

Related news