அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும் துலா ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்

மேஷம்:

அசுவினி : உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி : மற்றவர்களால் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வரவு அதிகரிக்கும் நாள் கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படும் செயல்களில் வெற்றி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4 : மனதில் ஏற்படும் குழப்பத்தால் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். முயற்சிகளில் கவனம் தேவை. ரோகிணி : இன்று விரும்பியபடி செயல்படுவீர். விஐபிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பீர். மிருகசீரிடம் 1,2 : உங்கள் திறமை வெளிப்படும். வழக்கமான செயல் அதிக நன்மையில் முடிவு பெறும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்தவற்றில் இழுபறி உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திருவாதிரை : வாகனத்தை இயக்குவதில் கவனம் தேவை.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் போகும். புனர்பூசம் 1,2,3 : உறவினர்கள் உதவியை எதிர்பார்ப்பீர் என்றாலும் தக்க நேரத்தில் அது கிடைக்காமல் போகும்.

கடகம்:

புனர்பூசம் 4 : செயல்களில் லாபம் காண்பீர்கள். நேற்றுவரை இருந்து வந்த பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர். பூசம் : இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும் ஆயில்யம் : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். அதனால் முன்னேற்றத்துடன் கூடிய லாபம் உண்டாக்கும்.

சிம்மம்:

மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். பூரம் : பணிபுரியும் இடத்தில் உண்டான சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர். உத்திரம் 1 : தொழிலை விரிவு செய்வதற்காக குடும்பத்துடன் ஆலோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்.

கன்னி:

உத்திரம் 2,3,4 : மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பெரியோர் துணையுடன் உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர். அஸ்தம் : விஐபிகளின் ஆதரவால் நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் சிரமம் குறையும். சித்திரை 1,2 : முயற்சியில் வெற்றி காண்பீர். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் உங்களை தேடி வருவர்.

துலாம்:

சித்திரை 3,4 : வியாபாரத்தில் உங்கள் முயற்சி இழுபறியாகும் என்பதால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். சுவாதி : நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள் விசாகம் 1,2,3 : தேவையற்ற சங்கடங்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வம்பு வழக்குகள் இன்று உங்களைத்தேடி வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை சாதிப்பீர்கள். இன்று உங்கள் எண்ணம் நிறைவேறும். அனுஷம் : விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வருவர். நண்பர்கள் உதவியால் ஒரு செயல் வெற்றியாகும். கேட்டை : சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

தனுசு:

மூலம் : எதிரிகள் சதியை முறியடிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். பூராடம் : உங்கள் செயல் இன்று முன்னேற்றமாகும். மறைமுகமாக தொல்லை தந்தவர்களை அடையாளம் காண்பீர்கள். உத்திராடம் 1: விவேகத்துடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்

மகரம்:

உத்திராடம் 2,3,4 : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கடைசி நேரத்தில் உங்கள் கை நழுவிச் செல்லும். கவனம் தேவை. திருவோணம் : உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : எச்சரிக்கையுடன் செயல்படுவதால் முயற்சியில் நன்மைகளை அடைவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4 : உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சதயம் : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று ஏமாற்றம் அளிக்கும். வேலை பளுவின் காரணமாக சோர்வு அடைவீர்கள். பூரட்டாதி 1,2,3 : முயற்சிகளில் நன்மையைக் காண முடியாமல் போகும். தேவையற்றப் பிரச்னைகள் தோன்றும்.

மீனம்:

பூரட்டாதி 4 : அலுவலகப் பணியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும். உத்திரட்டாதி : நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு தகவல் வரும். குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவீர். ரேவதி : உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்

 

 

Latest news

Related news