கிளிநொச்சி – பரந்தன், காஞ்சிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டின் அருகில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்தே ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
நேற்று (26) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்