இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி பிரித்தானியாவில் போராட்டம்

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி பிரித்தானியாவில் இன்றையதினம் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பினரின் ஏற்பாட்டில், தமிழர்களின் தன்னாட்சிக்கான உரிமைக்குரலாகவும், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிய கரியாலயம் முன்பாக இன்றையதினம் (04.02.2026) காலை 11 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது. இதில் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள், லண்டன் மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தனர்.

போராட்டத்தின் போது, தமிழர்களின் அரசியல் உரிமைகள், தன்னாட்சி, மனித உரிமை மீறல்கள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

Latest news

Related news