பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தினை சிறப்புற நடாத்த பக்தர்களுக்கு அழைப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவமானது எதிர்வரும் 04.08.2023 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆலயபரிபால சபையினர் கேட்டு நிற்கின்றனர்.

பிரதமகுருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் வெள்ளிகிழமை காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட இருக்கின்றது.

தொடர்ந்து ஆலய பூசகரால் பாரம்பரிய முறைப்படி 4.30 மணியளவில் கோட்டக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்று மறுநாள் அதிகாலை 4 மணியளவில் பரிகலம் வழிவிடுதல் நிகழ்வு இடம்பெறும்.

எனவே அன்றைய தினத்தில் அனைத்து பக்தர்களையும் ஒன்று திரண்டு ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது. தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news