முல்லைத்தீவு மாவட்டத்தில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு,கற்ச்சிலைமடு,காதலியார் சம்மளங்குளம்,ஒலுமடு ஆகிய கிராமங்களிற்கு சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றைய தினம் (03) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கெளரவ திரு.பிரசன்ன ரணத்துங்க அவர்களினால் கையளிக்கப்பட்டது.

சுத்தமான குடிநீர் இல்லாது மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். அத்தோடு தீரா நோயினாலும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையினைப் போக்கிட சிறந்த செயற்றிட்டமாக நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவாட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த, நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு, சத்தியானந்த, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேன, முல்லத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.உமாமகேஸ்வரன் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி, கிராம அலுவலகர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Latest news

Related news