வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் நெளுக்குளம் பாடசாலை மாணவர்கள் சாதனை

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா நெளுக்குளம் பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆண், பெண் இருபாலருக்குமான பளுதூக்கும் போட்டியில் நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்கள் 17வயது ஆண்கள் பிரிவில் ஜெ. ஜதுர்சன் 61kg எடை பிரிவில் 112kg தூக்கி தங்க பதக்கமும், கி. சுபிஸ்கரன் 73kg எடை பிரிவில் 126kg தூக்கி வெள்ளி பதக்கமும், 20வயது ஆண்கள் பிரிவில் அ. கோகுலன் 67kg எடை பிரிவில் 140kg தூக்கி தங்கமும், 17 வயது பெண்கள் பிரிவில் ச. பிரியங்கா 81kg எடை பிரிவில் 66kg தூக்கி வெண்கல பதக்கமும் , யோ. சாருஜன், கா . பிரியதர்சன், அ. பிரகீஷ், க. கலா முறையே 4ஆம், 5ஆம் இடங்களையும் பெற்று பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ச.யெனோஜன் பயிற்றுவிப்பாளரின் மூலம் இவ் வெற்றி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news