தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நாடகம்

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு VisAbility அமைப்பினால் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி வவுனியா ஆச்சிபுரம், சமளங்குளம், எல்லப்பர் மருதங்குளம் ஆகிய பிரதேசங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நாடகங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விளக்கங்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

Visability நிறுவனமானது ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இலங்கையில் இயங்கி வரும் ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனமாகும். இந் நிறுவனமானது மாற்றுத்திறனாளிகளது கல்வி மற்றும் அவர்களுடைய உரிமை தொடர்பில் வேலை செய்கின்ற ஒரு அமைப்பாகும்.

Latest news

Related news