இன்று (29.09.2023) நடைபெற்ற இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன நிர்வாக சபைக்கான தேர்தலில் தலைவருக்காக போட்டியிட்ட ஜஸ்வர் உமர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடன் எதிர்த்து போட்டியிட்ட தக்ஷித திலங்கவை 45-20 என்ற வித்தியாசத்தில் ஜஸ்வர் உமர் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இலங்கை மன்றக் கல்லூரியில் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நடைபெற்றது.
இலங்கையின் 67 காற்பந்தாட்ட சம்மேளனங்ககள் இந்த தேர்தலில் கலந்து கொண்டிருந்தன.