புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் நேற்று 30.09.23 நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

7 ஆம் வட்டாரம் சிவநகர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞன் கே.ரி.எம். மோட்டார் சைக்கிலில் பயணித்த 28 அகவையுடைய கஜலன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news