மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொன் செல்வராசா இன்று (13.10.2023) காலமானார்.
பொன்.செல்வராசா அவர்கள் பட்டிருப்பு தொகுதியில் பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கோட்டைக்கல்லாற்றை மணவாழ்க்கையாகவும் கொண்ட அமரர் பொ.செல்வராசா அவர்கள் அரசியலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 2001 ஆம் ஆண்டில் தவிகூ, தமிழ் காங்கிரசு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை நிறுவினர்.
அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூ சார்பிலும், 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
அத்தோடு 2010, தொடக்கம் இன்று வரையும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சின் மூத்த துணைத்தலைவராகவும், மத்தியகுழு, அரசியல் குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் உள்ளார்.
மக்களுக்காக பல சேவையாற்றிய மூத்த தமிழ் அரசியல்வாதியான இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறுதிக்கிரியை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 15.10.2023 பி.ப 3 மணிக்கு இடம்பெறும்.