புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இடத்தில் பெரிய தந்தைக்கும் குறித்த நபர் ஒருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தலையில் தாக்கப்பட்டதனால் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (வயது 71) கைவேலி பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கதக்க நபர் கேப்பாபிலவு இராணுவ முகாமில் பணியாற்றி வருகின்றார். இவர் போதை பொருள் பாவித்து அடித்து கொன்றதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கைக்கலப்பிற்கு காரணம் பழைய முரண்பாடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு குறித்த சந்தேக நபரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news