வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் கலாச்சார பேரவை இணைந்து நடாத்தும் 2023 ம் ஆண்டுக்கான கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டு விழா இன்று (07.11.2023) காலை ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு துறைகளில் பிரகாசித்து வரும் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது 

அந்தவகையில் ஊடக துறைசார்ந்த இளங்கலைஞர் விருது முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் செல்வராசா சுமந்தன் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு பல்வேறு துறை சார்ந்த இளங்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


