இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் உட்கட்சியின் ஜனநாயகம் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
இதில் வெற்றி பெற்ற எனது நண்பன் சிவஞானம் சிறிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மாவை சேனாதிராஜா இத்தனை காலமும் வழி நடத்திய இலங்கை தமிழரசுக் கட்சியின் பொறுப்பானது தற்சமயம் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் மகிழ்ச்சியான விடயம் என்பதுடன், இந்த பயணத்தில் இருவரும் தொடர்ந்து ஒன்றாகவே இணைந்து பயணிப்போம்.
ஆகவே, எமது முழு ஒத்துழைப்பினையும் தற்சமயம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறிதரனுக்கு வழங்குவேன் – என்றும் அவர் குறிப்பிட்டார்.