புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய சம்பவம் ஒன்று இன்றைய தினம் (21.02.2024) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டி திருடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்றையதினம் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க நபர் இரகசிய கமராவின் உதவியுடன் இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து 6 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை நாளையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest news

Related news