இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று கையளித்துள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில்  2023 மற்றும் 2024 ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் கால போக செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதிக மழை மற்றும் நோய்த்தாக்கம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 1.5 மெற்றிக் தொண் அறுவடை செய்திருந்தோம். ஆனால் இம்முறை 0.5 மெற்றிக் தொண் மாத்திரமே அறுவடை செய்ய முடிந்துள்ளது.
இதேவேளை செய்கைக்காக ஏக்கர் நன்றுக்கு 130,000 ரூபா செலவிடப்பட்டது. ஆனால் 15 ரூபாவையும் பெறமுடியாத நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 115,000 ரூபா நட்டத்தை அடைந்துள்ளோம்.
எமது நிலையை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டில் செய்கை மேற்கொள்ளும் வகையில் நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்து உதவுமாறு குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

Related news