2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியானது இம்மாதம் 23,24,25 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசியமட்ட பளு தூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்பதக்கமும், ஒரு சில்வர் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர் .
பா.கிசாளினி 49 kg எடைபிரிவில் 80 kg எடையைதூக்கி முதலாம் இடத்தையும் ,த.வன்சிகா 64kg எடைபிரிவில் 44kg தூக்கி முதலாம் இடத்தையும், க.அபிசாளினி 81kg எடைபிரிவில் 70 kg தூக்கி இரண்டாம் இடத்தையும் , ச.அனுஷா 59kg எடைபிரிவில் 61 kg எடையை தூக்கி மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் , மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஞானஜீவன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.