புலிபாய்ந்தகல் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று (28.02.2024) விஜயம் ஒன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிபாய்ந்தகல் பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

புலிபாய்ந்தகல் பகுதி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்வதில் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக மீனவர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முறையிட்டதனையடுத்து குறித்த பகுதிக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மீனவர்களிடம் சட்டவிரோத மீன்பிடி , காணி உரிமம் தொடர்பான பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டது.

குறித்த விஜயத்தில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கொக்கு தொடுவாய் வடக்கு கிராம சேவையாளர் எம்.பிரபு, திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள், மற்றும் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news