கரைவலைத் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் இரும்பு மிதப்பியை இரண்டு மாதத்திற்குள் அகற்றி தருவதாக அமைச்சர் உறுதி

கரைவலைத் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் இரும்பு மித்தப்பியை இரண்டு மாத்த்துக்குள் அகற்றி தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி அளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று(28) விஜயம் மேற்கொண்டுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கள விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

அந்த வகையில் இன்று காலை புலிபாய்ந்த கல் பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு நிலைமைகளை பார்வையிட்டு அதன் பின்னர் செம்மலை கிழக்கு நாயாறு பகுதியில் 2021 ஆம் ஆண்டு கடலில் மிதந்து வந்த இரும்பு மிதப்பியானது கரைவலைத் தொழிலுக்கு பாரிய இடையூறாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து குறித்த பகுதிக்கு சென்றார்

அந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இரும்பு மிதப்பியை இரண்டு மாதங்களுக்குள் அகற்றி தருவதாக மீனவர்களுக்கு உறுதியளித்துள்ளார்

Latest news

Related news