முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் பா.குணபாலன் அவர்களின் தலைமையில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி மிகவும் சிறப்பான முறையில் (05) அன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் விளையாட்டுப்போட்டி ஆரம்பமாக அதனைத்தொடர்ந்து அணிவகுப்பும் நடைபெற்றது அத்துடன் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இடைவேளை கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.போட்டிகளில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைத்து வயதுப் பிரிவிலும் முதன்மை வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் விளையாட்டுப்போட்டி ஆரம்பமாக அதனைத்தொடர்ந்து அணிவகுப்பும் நடைபெற்றது அத்துடன் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வி.நவநீதன்(கூட்டுத்திட்ட தலைவர்,திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்) அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக வண.பிதா.யூட்.அமலதாஸ்(பங்குத்தந்தை-உடுப்புக்குளம்) , பி.ஜி.கே.டிலான்(ஆசிரிய ஆலோசகர் ,உடற்கல்வி-வலயக்கல்வி பணிமனை , முல்லைத்தீவு) , க.ஜோதிப்பிரகாஷ்(ஆசரியர் மு/ புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி) , திருமதி.வ.மகேந்திரம்(ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோர் கலந்து சிறப்பிக்க இந்நிகழ்வில் அயற்பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அயற்பாடசாலை ஆசிரியர்கள் , அயற்பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.