புதுக்குடியிருப்பில் மரணவீட்டில் கைகலப்பு 5 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் நேற்று (29.03.2024) நடைபெற்ற மரணவீடு ஒன்றின் இறுதி நிகழ்வின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதில் 5 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

சுதந்திரபுரம் மத்தி பகுதியினை சேர்ந்த 61 அகவையுடை குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 24.03.24 அன்று தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியபோது தவறிவீழ்ந்து காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த 28.03.24 அன்று உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று (29.03.2024) சுதந்திரபுரம் மத்தி பகுதியில் உள்ள அவரின் வீட்டில் நடைபெற்றுள்ளது.

இதற்கு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து அவரின் உறவினர்கள் வருகை தந்துள்ளார்கள் இவ்வாறு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வருகை தந்த இளைஞர்களுக்கும் சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞர்களுக்கும் சுடலையில் வைத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அது பின்னர் கைகலப்பாக மாறி சுடலையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டு பின்னர் இறந்தவரின் வீட்டில் வைத்தும் கொட்டான்கள் கத்திகள் கொண்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ன.

இதன்போது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வருகை தந்த உறவினர்களின் மூவருக்கும் சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞர்களில் மூவரும் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்து ஓருவர் தீவிர சிகிச்சைக்காக யாழ்போதான மருத்துவமனைக்க மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Latest news

Related news