வடமாகாண தைக்வெண்டோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி 1ஆம் இடம்.

மாகாண விளையாட்டு திணைக்களத்தின் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் இடையே மன்னார் உள்ளக அரங்கில் நடைபெற்ற தைக்வொண்டோ 8 நிறைப் பிரிவினருக்கான போட்டியில் அதிகமான பதக்கங்களை பெற்று 5 போட்டிகளில் ஆண்கள் முதலிடம் பெற்று வட மாகாண ஆண்களுக்கான தைத்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி 1ம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.

1ஆம் இடம் முல்லைத்தீவு மாவட்டம் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலத்தையும், 2ஆம் இடத்தினை யாழ்ப்பாணம் மாவட்டம் 1தங்கம், 4வெள்ளி, 2 வெண்கலத்தையும், 3 ஆம் இடத்தினை மன்னார் மாவட்டம் 1தங்கம், 1வெள்ளி, 4 வெண்கலத்தையும், 4 ஆம் இடத்தினை வவுனியா மாவட்டம் தங்கம்1 ,5 ஆம் இடத்தினை கிளிநொச்சி மாவட்டம் வெள்ளி 1, வெண்கலம்3 ஆகிய முறையே இடங்களை பெற்றிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட அணி சார்பாக விஸ்வமடு, பாரதிபுரம், உடையார்கட்டு, மூங்கிலாறு, வள்ளிபுனம் ,செல்வபுரம், தீர்த்தகரை, உடுப்புக்குளம், முள்ளியவளை, மாங்குளம், அம்பாள்புரம், பாண்டியன்குளம், கரும்புள்ளியான் ஆகிய பிரதேச வீர்கள் முல்லைத்தீவு மாவட்ட அணியாக பங்கு கொண்டிருந்தனர்.

Latest news

Related news