முல்லைத்தீவு – முள்ளியவளை விபத்தில் படுகாயமடைந்த மற்றைய இளைஞனும் உயிரிழப்பு.!

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இரண்டாவது இளைஞரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவதினம் உயிரிழந்தார் .

இந்த சம்பவம் நேற்று முன்தினம் 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 அகவையுடைய திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் படுகாயமடைந்த 29 வயதான இரண்டாவது இளைஞர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Latest news

Related news