வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு – முள்ளிவாய்க்காலில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை – தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தாயக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இறுதி உயிரை காப்பாற்ற வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்பாக இன்று (16.05.2024) காலை வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

Latest news

Related news