வடமாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் இரு அணியினரும் 1ஆம் இடம்பெற்று சாதனை

முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் மாகாண மட்டத்தில் நேற்றையதினம் (19.05.2024) நடத்தப்பட்ட யூடோ போட்டியில் 14 நிறை பிரிவிற்கான போட்டிகளில் 10 நிறைப்பிரிவில் 10 தங்க பதக்கங்களை தமதாக்கி வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்/பெண் இரு பிரிவு அணிகளும் 1ம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.   

இவ் நிகழ்வில் விருந்தினராக வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தலைமைப்பீடம் (Ho) S.சதானந்தன் அவர்களும், மாவட்ட வைத்திய அதிகாரி (MO/Planning) Dr.K.சுதர்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாவட்டங்கள் பெற்ற பதக்கங்கள் ஆண்கள் *முல்லைத்தீவு மாவட்டம் 5தங்கம் 4வெள்ளி 3வெண்கலம் *வவுனியா மாவட்டம் 1தங்கம் 2வெள்ளி 4வெண்கலம் *கிளிநொச்சி தங்கம்1 வெள்ளி– வெண்கலம்1 *மன்னார் மாவட்டம் 1வெள்ளி 1வெண்கலம்

பெண்கள் *முல்லைத்தீவு மாவட்டம். 5தங்கம் 4வெள்ளி 5வெண்கலம் *வவுனியா மாவட்டம் 1 தங்கம் வெள்ளி வெண்கலம் *கிளிநொச்சி மாவட்டம் 1தங்கம் 3வெள்ளி 1வெண்கலம் *வவுனியா மாவட்டம் 1தங்கம் வெள்ளி– வெண்கலம் 1

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக உடையார்கட்டு, திம்பிலி, செல்வபுரம் , உண்ணாப்பிலவு, கரைச்சிக்குடியிருப்பு,  உடுப்புக்குளம், அளம்பில், குமுழமுனை , கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் , தண்ணீரூற்று, முள்ளியவளை, தண்டுவான், பழம்பாசி ,மாங்குளம், பாலிநகர் ,கொல்லவிளான்குளம், பாண்டியன்குளம், கரும்புள்ளியான் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் வெற்றிகளை பெற்றுள்ளனர்.

Latest news

Related news