முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா வள்ளுவர்புரம் ‘நிலா முற்றம்’ மகளிர் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் மிகவும் சிறப்புற இடம்பெற்றது.
முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா வள்ளுவர்புரம் ‘நிலா முற்றம்’ மகளிர் அமைப்பின் ஓராம் ஆண்டு நிறைவு விழா நிலமுற்ற அலுவலகத்தில் கலை நிகழ்வுகள், விளையாட்டுக்கள் இடம்பெற்று குழு அங்கத்தவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குழுவின் தலைவர் கவிதா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், புலம்பெயர் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த கந்தசாமி, கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளருமான ஞா.யூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் க.தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் கேதினி, கட்சியின் புதுக்குடியிருப்பு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கிருபாலினி, கட்சியின் முள்ளிவளை பிரதேச அமைப்பாளர் சஞ்சீவன் மற்றும் மகளிர் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.