கேப்பாபிலவில் 14 வயது சிறுமி வன்புணர்வு.

முல்லைத்தீவில் சாப்பாட்டுக்கடை உரிமையாளரால் பாடசாலை சிறுமி வன்புணர்வுக்கு உட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்திவரும் நபர் ஒருவரால் 14 வயதுடைய பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினை அவதானித்த பெற்றோர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்குட்படுத்தியதில் குறித்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார் குறித்த சிறுமியின் நிலைக்கு காரணமான நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை நேற்றையதினம் (28) நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்தி வரும் 55 வயது மதிக்கத்தக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news