சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் மாபெரும் சிரமதானம்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்றையதினம் (04.06.2024) மாபெரும் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது .

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகரைத் தூய்மையாக வைத்திருப்போம் எனும் நோக்கோடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக பல்வேறு திணைக்களங்களின் பங்குபற்றுதலோடு சிரமதான பணியானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பிரகாசமான எதிர்காலத்திற்காக நிலத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நாளையதினம் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட இருக்கின்றது.

குறித்த சிரமதான பணியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) சி.ஜெயகாந்தன்,  முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேன, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத், இராணுவத்தினர், வர்த்தக சங்க தலைவர் நவநீதன் , சிவில் பாதுகாப்பு பிரிவினர், சுகாதார துறையினர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொலிஸார், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நகரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Latest news

Related news