_யாழ்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான சார்ஜான் டாபேட் சம்பியன்ஷிப் முதல்கட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவர்கள் வெற்றியீட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடாத்திய சார் ஜான் டாபேட் சாம்பியன்ஷிப் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டியின் முதல் கட்ட போட்டியானது வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுர மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நேற்றுமுன்தினம் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பங்கு பற்றி பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தனர்.
குறித்த போட்டியில் ர. டர்சியா 15வயது பெண்கள் பிரிவு 200m ,100M ஓட்ட போட்டியில் தங்க பதக்கத்தினையும், நீளம் பாய்தலில் வெள்ளி பதக்கத்தினையும், ச. ரக்சனா நீளம் பாய்தல் போட்டியில் திறமை சான்றிதழும் ,800m ஓட்ட போட்டியில் வெங்கல பதக்கம், 400m ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கத்தினையும், ப. தர்சன் 15 வயது ஆண்கள் பிரிவில் குண்டு போடுதல் போட்டியில் திறமை சான்றிதலும், ம. மயூரா13வயது பெண்கள் பிரிவில் உயரம் பாய்தல் போட்டியில் திறமை சான்றிதழையும் பெற்று பாடசாலைக்கும் , வலயத்திற்கும் பெருமை சேர்த்திருந்தனர்.
குறித்த மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளர். ச. ஜெனோஜன் அவர்களின் பயிற்சிவிப்பிலும், உடற்கல்வி ஆசிரியர்களான றெ.பெரேரா, குமுதினி ஜெயக்குமார் ஆகிய ஆசிரியர்களின் நெறிப்படுத்தலிலும் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.