வங்கி ஊழியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்க கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று வவவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நடாத்திய இந்த போராட்டம் ஆனது வவுனியா ஏ9 வீதி பூட்சிற்றிக்கு முன்பாக இன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டமானது வங்கி ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஆனது அரச ஊழியர்கள் போன்று அதிகரிப்பதில்ல, மூன்று வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் இந்த வருட ஆரம்பத்தில் புதுப்பிக்கப்பட்ட வேண்டிய உடன்படிக்கை ஆனது ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை நிதி அமைச்சு சங்கத்தால் கோரப்பட்ட வீகிதத்தில் சம்பள அதிகரிப்பு செய்யப்படவில்லை. அதனை எதிர்த்து நியாயமான சம்பள அதிகரிப்பை தருமாறு கோரிக்கை விடும் முகமாக இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தமை இடம்பெற்றது.