மணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது நேற்றையதினம் (14) புதுக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஐயப்பன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது சிறப்புற இடம்பெற்றிருந்தது.
ஆலய தலைவர் அமுதலிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த விழாவில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கௌரவ விருந்தினராக கிருபாலிங்கம், மணியம்மா, ஜெயபாலன் ,இலங்கை வங்கி முன்னாள் முகாமையாளர் பால்ராஜா, கமநல அபிவவிருத்தி உத்தியோகத்தர் தயாறூபன் , அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி வரவேற்புரை, தலைமையுரை, அறநெறி மாணவர்களின் நிகழ்வு ,வரவேற்பு நடனம்,பேச்சு , கதை, பிரதம,கௌரவ,சிறப்பு விருந்தினர்கள் உரை, பரிசில்கள் வழங்கிவைப்பு, நன்றியுரையை தொடர்ந்து அன்னதானத்துடன் குறித்த நிகழ்வு நிறைவுபெற்றிருந்தது.